தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாக இருக்கின்ற சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் (25.10.2025) இரவு 11.30 மணிக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது (Depression), கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h எனும் வேகத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்றும் அதே பிரதேசத்தில் காணப்படுகிறது.

இது, மட்டக்களப்பிலிருந்து இருந்து வடகிழக்காக கிட்டத்தட்ட 750km தூரத்திலும்,
திருகோணமலையிலுந்து இருந்து வடகிழக்காக 760km தூரத்திலும்,
யாழ்ப்பாணத்திலுந்து இருந்து கிழக்கு-வடகிழக்காக 830km தூரத்திலும் காணப்படுகின்றது.
இதேபோல், சென்னை, தமிழ்நாட்டிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 850km தூரத்தில் காணப்படுகிறது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26.10.2025) காலை ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவடைந்து, அதன் பின்னர் இன்று மாலை தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனை சூழ உள்ள மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக இன்று ஒரு சூறாவளி புயலாக (Cyclonic Storm) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(இது ஒரு சூறாவளியாவாக வலுவடையும் பொழுது இதற்கு Thailand நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட எனும் Montha எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.)
அதன் பின்னர் இது நாளை மறுதினம் அதாவது எதிர்வரும் 28ஆம் திகதி காலை ஒரு ஆழ்ந்த சூறாவளி புயலாக (Severe Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இது வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ச்சியாக நகர்ந்து, எதிர்வரும் 28ஆம் திகதி மாலை அல்லது இரவு ஆந்திரப்பிரதேச கரையோரத்தில் மச்சாளிப்பட்டினத்திற்கும் கலிங்கப்படிதத்திற்கும் இற்கும் இடையில் ஒரு புயலாக ( Severe Cyclonic Storm) ஊடறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் வீசும் காற்றின் வேகமானது 90km முதல் 100km வரையான வேகத்தில் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.








