Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதாள குழுவிற்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கிய களுத்துறை பொலிஸ் அதிகாரி – அதிர்ச்சியை ஏற்படுத்தும் விசாரணை தகவல்

பாதாள குழுவிற்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கிய களுத்துறை பொலிஸ் அதிகாரி – அதிர்ச்சியை ஏற்படுத்தும் விசாரணை தகவல்

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

களுத்துறை தெற்கு முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி பாதாள உலக குழுவினருக்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி களுத்துறை தெற்கு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அன்றைய தினமே களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் கிடைபெற்ற தகவல்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

அதன்போது ஆயுதங்களுடன் பாதாள குழுவை சேர்ந்த ‘ஜப்பனா’ என்பவர் கைது செய்யப்பட்டார்.இவரிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைவிலங்கு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் அவர் களுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, இந்த துப்பாக்கிகள் எங்கு கிடைத்தது என கேட்டபோது ,ஆயுதங்கள் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி ருவன் விஜேசிங்க தான் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவரின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பொலிஸ் பொறுப்பதிகாரி ‘ஜப்பனா’வுடன் இருந்தமை மற்றும் அவருடன் விருந்துகளில் கலந்து கொண்டமை, பொலிஸ் பொறுப்பதிகாரியின் துப்பாக்கியை ‘ஜப்பனா’ பாவித்த அனைத்தும் புகைப்படங்களும் இருந்துள்ளன.

இந்த பொலிஸ் அதிகாரி பாதாள குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த ‘ஜப்பனா’ களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் நிலைய அதிகாரியின் அறையில் விசாரணைகள் நடைபெறும் போது இவரும் விசாரணைகள் நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!

October 10, 2026
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!
செய்திகள்

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

October 10, 2026
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

October 10, 2026
Next Post
15 சதவீதத்தால் அதிகரிக்கப்படப்போகிறதா சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்?

15 சதவீதத்தால் அதிகரிக்கப்படப்போகிறதா சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு