Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் பேரணி: என்னை கைது செய்ய அரசு முயற்சிக்கிறது – உதய கம்மன்பில

நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் பேரணி: என்னை கைது செய்ய அரசு முயற்சிக்கிறது – உதய கம்மன்பில

11 months ago
in செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச சார்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஊடாக எனக்கு எதிராக முறைப்பாடளித்து, சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்ட முறைமை குறித்து நான் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய விடயங்களினால் பணிப்பாளர் நாயகத்தின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் 125 ஆவது பிரிவின் பிரகாரம் நான் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம், மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயம் உட்பட அரச நிறுவனங்களில் எமது ஆதரவாளர்கள் இருப்பதை போன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் எமது ஆட்கள் உள்ளார்கள். நடப்பவற்றை எமக்கு குறிப்பிடுவார்கள்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக பதவிக்கு மாதவ தென்னக்கோனுக்கு முழுமையான தகுதி காணப்பட்ட நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலையீட்டினால் தான் தெரிவில் இரண்டாம் நிலையில் இருந்த ரங்க திஸாநாயக்க பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் முறைகேடானது என்பதை சாட்சியங்களுடன் வெளிப்படுத்தினேன்.

வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு நான் இவற்றை குறிப்பிடவில்லை.

தவறை திருத்திக் கொள்வதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.மாறாக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக எம்மை பழிவாங்க முயற்சிக்கிறது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் ஐந்து முறை முயற்சித்து தோல்வியடைந்தது. இந்த முறையும் முயற்சிக்கிறது. இந்த முறை சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய செல்வாக்கு

இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய செல்வாக்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.