Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

9 months ago
in உலக செய்திகள், செய்திகள்

பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக, தொடரப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவருக்கு தொடர்புடைய ரூ.3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை அமுலாக்கத் துறை (ED) முடக்கி நடவடிக்கை எடுத்திருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடக்கப்பட்ட சொத்துகளில், மும்பையின் பாலி ஹில் பகுதியில் உள்ள 66 ஆண்டுகள் பழமையான அம்பானியின் வீடு உள்பட அவரது குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான பிற குடியிருப்புக் கட்டடங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டில்லியில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் மார்க்கில் உள்ள ரிலையன்ஸ் மையத்துக்குச் சொந்தமான ஒரு நிலப்பகுதி, தேசிய தலைநகர் நொய்டா, காசியாபாத், மும்பை, புணே, தாணே, ஹைதராபாத், சென்னை மற்றும் கிழக்கு கோதாவரியில் உள்ள பல சொத்துக்களும் இதில் அடங்கும். ஆதாரங்களின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.3,084 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் போன்றவை திரட்டிய பொது நிதியை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தல் மற்றும் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் கீழ் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!

August 8, 2026
நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 8, 2026
Next Post
அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்; 60,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!

அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்; 60,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு