Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாழங்குடாவில் சஹ்ரான் குண்டு சோதனை செய்த பகுதிக்கு அருகில் மர்மமான குழி; விசேட அதிரடிப்படையினர் சோதனை

தாழங்குடாவில் சஹ்ரான் குண்டு சோதனை செய்த பகுதிக்கு அருகில் மர்மமான குழி; விசேட அதிரடிப்படையினர் சோதனை

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் இன்று வியாழக்கிழமை (06) சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

இதுபற்றி தெரியவருவதாவது,

குறித்த பகுதியான தாளங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் சஹ்ரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து சோதனைசெய்யப்பட்டது.

இவ்வாறு சோதனைசெய்யப்பட்ட காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4ம் திகதி காணிக்கு அதன் உரிமையாளர் சென்ற போது அங்கு நிலத்தை பாரியளவில் குழி தோண்டப்பட்டு இருப்பதை கண்ட அவர், சஹ்ரான் குழு போன்றவர்கள் போல ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சத்தை அடுத்து நேற்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் சில தீய சக்திகள் அந்த பகுதியில் ஏதாவது வெடிபொருட்கள் அல்லது வேறு ஏதாவது பொருட்களை புதைத்து வைத்துவிட்டு அதை தோண்டி மீட்டு எடுப்பதற்காக குழி தோண்டி இருக்கும் என்ற பல சந்தேகங்கள் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் இன்று சென்று அந்த பகுதியில் நிலத்தை கம்பிகளால் குத்தியும் மற்றும் எக்ஸ்றே இயந்திரம் மூலமாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
Next Post
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு