பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன் பிடித்த 14 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.








