Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தோணிகளை சேதமாக்கிய யானைகள்

மட்டக்களப்பில் தோணிகளை சேதமாக்கிய யானைகள்

9 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளினால் பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 07 மற்றும் நேற்று முன்தினம் இரவு புதுக்குடியிருப்பு சிரம்பையடி பிள்ளையார் ஆலய பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் மீனவர்களின் தோணிகளை சேதப்படுத்தியுள்ளதுடன், நெற்காணிகள் மற்றும் தென்னை,பலா,மாமரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளதுடன் பயன்தருமரங்களையும் அழித்துள்ளது.

இதுவரை காலமும் படுவான்கரை பகுதி மக்களை துன்புறுத்திய காட்டு யானைகள் இலங்கையின் மிகப்பெரும் வாவிகளில் ஒன்றான மட்டக்களப்பு வாவியினையும் ஊடறுத்துவந்து எழுவான் கரை பகுதியில் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவருகின்றது.

இதன்போது மட்டக்களப்பு வாவிக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் நான்கு தோணிகளையும் யானைகள் சேதப்படுத்தியதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

யானைகளை துரத்துவதற்கான நடவடிக்கைகளை வனஜீவராசி திணைக்களம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கின்றபோதிலும் யானைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுள்ளதை காணமுடிகின்றது.

எழுவான்கரைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள யானைகளின் தாக்கங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வாங்கிய நபர் கைது

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வாங்கிய நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு