Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத் தண்டனை

மன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத் தண்டனை

9 months ago
in செய்திகள்

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி . எம். மிஹால் முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணி தினேஷன் ஆஜராகியிருந்தார். வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார்.

தண்டனை குறித்த தனது சமர் பணத்தில், அரச சட்டவாதி , “இக் குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடுமையாக வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் மீண்டும் இடம் பெறாமல் தடுக்கும் பொருட்டு, குற்றவாளிக்கு அதியுச்ச கட்டாய சிறை தண்டனை வழங்க வேண்டும்” எனவும், கொடூரமான இந்த செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுத் தருமாறும் மன்றை அவர் கோரினார்.

அரச சட்டவாதியின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி , குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
Next Post
சட்ட விரோதமான தமிழகம் சென்ற மன்னார் நபர் கைது

சட்ட விரோதமான தமிழகம் சென்ற மன்னார் நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு