Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ

TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ

51 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

TIN இலக்கம் இல்லாதவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும், வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கும் தற்காலிகத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முறைப்படுத்தி, வரி அறவீட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN இலக்கத்தை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும், TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 17 மில்லியன் மக்களில் இதுவரை 13 மில்லியன் பேருக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1.2 மில்லியன் பேர் மாத்திரமே வருமான வரி செலுத்துபவர்களாகப் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், எஞ்சியுள்ள சுமார் 4 மில்லியன் பேருக்கும் TIN இலக்கத்தை வழங்க வேண்டியுள்ளதுடன், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் சில சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதிலும், வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதிலும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டதுடன், நீண்ட வரிசைகளிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், TIN இலக்கம் இல்லாதவர்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் அடிப்படைத் தகவல்களைச் சமர்ப்பித்து குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், TIN இலக்கங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதால் பொதுமக்கள் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!
செய்திகள்

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

November 4, 2026
மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!

November 4, 2026
நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு
செய்திகள்

நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

November 4, 2026
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு; பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை!
செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு; பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை!

November 4, 2026
கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!
செய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

November 4, 2026
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!
செய்திகள்

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

November 4, 2026
Next Post
மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு