Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

56 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா நீதவான் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

குறித்த இளைஞர் போதைப்பொருள் எதனையும் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரது உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இளைஞர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும், பொலிஸார் தன்னைத் தாக்கியதாகக் குறித்த இளைஞர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, வவுனியா பொது வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த மருத்துவ அறிக்கையில், இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதுடன், அவரது உடலில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மருத்துவ அறிக்கையையும் சம்பவத்தின் பின்னணியையும் ஆராய்ந்த நீதவான், குறித்த இளைஞரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் இளைஞர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தி.திருவருள் தலைமையில் சட்டத்தரணிகளான திபின்சன் மற்றும் ஜெனைனி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!

November 4, 2026
TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ

November 4, 2026
மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!

November 4, 2026
நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு
செய்திகள்

நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

November 4, 2026
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு; பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை!
செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு; பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை!

November 4, 2026
கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!
செய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

November 4, 2026
Next Post
எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு