Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு; பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை!

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு; பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவாக, பாடசாலைகளின் கால அட்டவணைகளைத் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய விசேட சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவெவவின் கையொப்பத்துடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2026ஆம் ஆண்டு முதலாம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள், எதிர்வரும் ஆண்டுகளில் படிப்படியாக ஏனைய வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வகுப்புகள் தொடர்பான கால அட்டவணை பின்வருமாறு அமையவுள்ளது,

  • 2027: தரம் 2 மற்றும் தரம் 6.
  • 2028: தரம் 3 மற்றும் தரம் 7.
  • 2029: தரம் 4, தரம் 8 மற்றும் தரம் 10.
  • 2030: தரம் 5, தரம் 9 மற்றும் தரம் 11.
  • 2031: தரம் 12.

இந்தச் சீர்திருத்தங்களின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள், 2033ஆம் ஆண்டில் முதன்முறையாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, புதிய கல்வி முறைக்கு மாறும் இடைக்காலத்தில் சில வகுப்புகளுக்கு தற்போதைய பாடத்திட்டமே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2027ஆம் ஆண்டில் தரம் 3, 4 மற்றும் 5 மாணவர்களுக்கும், 2028ஆம் ஆண்டில் தரம் 4 மற்றும் 5 மாணவர்களுக்கும், 2029ஆம் ஆண்டில் தரம் 5 மாணவர்களுக்கும் தற்போதைய பாடத்திட்டமே தொடரும்.

எனவே, புதிய கல்விச் சீர்திருத்தங்களை முறையாகவும் தடையின்றியும் நடைமுறைப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் அறிவிக்கப்பட்டுள்ள பாடத்திட்டச் செயற்பாட்டு வழிகாட்டுதல்களுக்கு அமைய பாடசாலைகளின் கால அட்டவணைகளைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ

November 4, 2026
மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!

November 4, 2026
நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு
செய்திகள்

நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

November 4, 2026
கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!
செய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

November 4, 2026
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!
செய்திகள்

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

November 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!
உலக செய்திகள்

அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

November 4, 2026
Next Post
நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு