Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலேசியா அருகே ரோஹிங்கியா அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி, பலர் மாயம்

மலேசியா அருகே ரோஹிங்கியா அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி, பலர் மாயம்

10 months ago
in உலக செய்திகள், செய்திகள்

மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். அதில் ஏராளமானவர்களைக் காணவில்லை.

இது குறித்து மலேசிய கடல்சார் அமைப்பின் பிராந்திய தலைவர் ரொமில் முஸ்தஃபா திங்கள்கிழமை கூறியதாவது மியான்மரில் இருந்து மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் உயிரிழந்த 12 பேரது உடல்கள் மலேசியா பகுதியிலும், 9 பேரது உடல்கள் தாய்லாந்திலும் மீட்கப்பட்டன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

பாதுகாப்பு அங்கி இல்லாமல் கடலில் மூழ்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும், மிதக்கும் பொருள்களைப் பற்றிக்கொண்டு யாராவது தப்பியிருக்கிறார்களா என்று தேடி வருகிறோம் என்றார் அவர்.

மியான்மரில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான ரோஹிங்கயாக்கள், அண்டை நாடான வங்கதேசத்திலும், மலேசியா போன்ற பிற நாடுகளிலும் தஞ்சமடைந்துவருகின்றனர். வங்கதேசத்தில் மட்டும் 13 லட்சம் ரோஹிங்கயா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில், மலேசியாவை நோக்கி இரு வாரங்களுக்கு முன்னர் படகில் புறப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள், வேறு இரு படகுகளுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டதாகவும், சிறிய படகில் சுமார் 70 பேரும் மற்றொரு படகில் 230 பேரும் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அதில் சிறிய படகு அந்தமான் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த 21 பேரது உடல்கள்தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன. 230 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு