Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ் போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ் போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை நேற்று (15) சனிக்கிழமை இரவு கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் சம்பவ தினமான நேற்று இரவு ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் நகரிலுள்ள அம்மன் கோவில் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன் போது ஹோட்டல் அறையில் தங்கியிருந்து கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான வியாபாரியான முறக்கொட்டாஞ்சேனை காளி கோவில் வீதியைச் சேர்ந்த தனுஷன் என்பவரை 3200 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும், அவருடன் இருந்த இன்னொரு வியாபாரியான விதுஷன் என்பவரை 1300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சித்தாண்டி பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த போதை வியாபாரியான சதீஸ்வரன் என்பவரை 2500 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரையும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
ஆரம்பமானது வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

ஆரம்பமானது வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு