Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நிறைவு; அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானம்

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நிறைவு; அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதாகவும், அந்த யோசனைகள் குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடப்படும் என்றும், அந்த யோசனைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்துவதாக தமது சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார்.

“நாங்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தோம். இந்த வரவு செலவுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திலும் சுகாதார அமைப்பை நிலைநிறுத்துவதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் நாங்கள் முன்வைத்த யோசனைகளில், விசேடமாக வைத்தியர்கள், விசேட வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்வதற்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இந்த யோசனைகள் தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும், ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்கும் வாய்ப்பு குறித்து ஆராயவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

இன்று நாங்கள் அவசர நிறைவேற்றுக் குழுவைக் கூட்டவுள்ளோம். எதிர்காலத்தில் அவசர மத்திய குழு கூட உள்ளது. அவசர நிறைவேற்றுக் குழு மற்றும் அவசர மத்திய குழுவில் இது தொடர்பாகக் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
Next Post
நாட்டில் சில இனவாத மற்றும் மதவாத பிசாசுகள் உள்ளன; அமைச்சர் சந்திரசேகர்

நாட்டில் சில இனவாத மற்றும் மதவாத பிசாசுகள் உள்ளன; அமைச்சர் சந்திரசேகர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு