ஹம்பாந்தோட்டை- மத்தள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (18) இரவு நுழைந்த காட்டு யானையை விரட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரவு 11:00 மணியளவில், யானை அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து, E6 நெடுஞ்சாலையின் 1.9 கிலோமீட்டர் தூண் அருகே உள்ள மின்சார வேலியை சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யானை மின்சார வேலியை உடைத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள், யானை வெடி வைத்து யானையை விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தநிலையில் யானை மத்தள நுழைவாயிலிலிருந்து வெளியேறி காட்டுக்குள் ஓடியதாகக் கூறப்படுகிறது.








