Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாலை மரியாதை இல்லாமல் மக்களுக்கு பணியாற்ற முடியாது?; நிலாந்தனின் பிரேரணையை தள்ளுபடி செய்த செங்கலடி தவிசாளர்!

மாலை மரியாதை இல்லாமல் மக்களுக்கு பணியாற்ற முடியாது?; நிலாந்தனின் பிரேரணையை தள்ளுபடி செய்த செங்கலடி தவிசாளர்!

8 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் மாலை, மரியாதை கௌரவிப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பிரயோகித்து அதனை தவிசாளர் தள்ளுபடி செய்தார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் மாலை மரியாதை கௌரவிப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தளவாய் செங்கலடி வட்டார உறுப்பினர் செ.நிலாந்தன் கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், NPP உறுப்பினர்கள் , மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தவிசாளர் குறித்த பிரேரணையை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி நீக்குவதாக தெரிவித்தார்.

மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக மக்களிடம் இருந்தோ அல்லது பொது அமைப்புகளிடம் இருந்தோ மாலை, மரியாதைகளை பெறுவது இலஞ்சம் பெறுவதற்கு ஒப்பானது என்றும், வீதிகள் உட்பட ஒப்பந்த காரர்களால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் ஒப்பந்த காரர்கள்,அரச அதிகாரிகளுக்கோ அல்லது அரசியல் வாதிகளுக்கோ மாலை மரியாதை செய்வது ஒப்பந்தகாரர்களிடம் இருந்து சலுகைகளை பெறுவதை போன்றது.

எனவே முன் உதாரணமாக ஏறாவூர் பற்று பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் போது மாலை மரியாதைகளை தடை செய்யுமாறு பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் குறித்த பிரேரணையை இன்றைய தினம் (20) கொட்டுவந்திருந்தார்.

ஆனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பணவு முதல் சிற்றூண்டி வரை மக்கள் வரிப்பணத்திலே வழங்கப்படுவதால் மாலை மரியாதை கௌரவிப்புகளை தடை செய்ய முடியாது என கூறிய தவிசாளர் குறித்த பிரேரணையை தள்ளிப்படி செய்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மாலை மரியாதைகளுக்காகவா அரச அதிகாரிகளும், பிரதேச சபை உறுப்பினர்களும் பணியாற்றுகின்றனர், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள், மக்களின் பணத்தில் செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக மாலை மரியாதை வேண்டும் என்று கூறுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
செய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

July 29, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்
காணொளிகள்

மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்

July 29, 2026
சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!
உலக செய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!

July 29, 2026
அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
செய்திகள்

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

July 29, 2026
எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

July 29, 2026
Next Post
இடியும் மின்னலும் அதிகரிக்கும் சாத்தியம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இடியும் மின்னலும் அதிகரிக்கும் சாத்தியம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.