கார்த்திகை 27 மாவீரர் தினத்தினை முன்னிட்டு தமிழர் தாயகம் எங்கும் அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த அடிப்படையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்லடி பகுதியில் அமைந்துள்ள மாவீரர் மணி மண்டபத்தை அஞ்சலி நிகழ்வுக்காக தூய்மைப் படுத்தும் சிரமதான பணி கல்லடி வாழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.










