Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாண மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பில் குழப்பம்; அமைச்சர் திரை நீக்கம் மறுத்து வெளியேறினார்

யாழ்ப்பாண மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பில் குழப்பம்; அமைச்சர் திரை நீக்கம் மறுத்து வெளியேறினார்

8 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியேறியுள்ளார்.

நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள குறித்த நீச்சல் தடாகத்தினை புனரமைப்பதற்கான பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பநிலை காரணமாக அவர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம், (23) புனரமைப்பு நடவடிக்கையின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே யாழ். மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையிலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் திரை நீக்கம் செய்ய மறுத்து வெளியேறிதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கம் மீளவும் அதனை புனரமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையில், கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் தடாகத்தை பார்வையிட்டதுடன், புனரமைப்பு பணிகள் தொடர்பில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதாவது, “டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள்.

பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தடாகத்தை உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய மறுத்து அமைச்சர் வெளியேறியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
Next Post
வடக்கில் சிகை அலங்கார நிலையம் வைத்திருக்கும் இராணுவத்தினர்; கேள்விக்குறியாகியுள்ள மக்களின் வாழ்வாதாரம்

வடக்கில் சிகை அலங்கார நிலையம் வைத்திருக்கும் இராணுவத்தினர்; கேள்விக்குறியாகியுள்ள மக்களின் வாழ்வாதாரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு