Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எப்படி திட்டமிட்டார்களோ அதேபோலதான் புத்தர் சிலை விவகாரமும்; மட்டு மாநகர சபை உறுப்பினர் யோன்சன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எப்படி திட்டமிட்டார்களோ அதேபோலதான் புத்தர் சிலை விவகாரமும்; மட்டு மாநகர சபை உறுப்பினர் யோன்சன்

10 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

கடந்த காலத்தில் புத்தர் சிலையை வைக்கும் போது திருகோணமலையின் நகர சபை ஆட்சி செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததா? இல்லை இப்போது ஆட்சி செய்வது அதே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்தா? இல்லை எனவே இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு திட்டமிட்டு செய்தார்களே அவ்வாறு மாற்று கட்சிகள் திட்டமிட்டு இன துவேசத்தை ஏற்படுத்த போட்ட திட்டம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டு மாநகர சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான யோன்சன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 5 வது அமர்வு கடந்த வியாழக்கிழமை (20) காலை 9.30 மணிக்கு சபா மண்டபத்தில் மாநகர சபை முதல் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற போது அவர் இதன் இதனை தெரிவித்தார்.

இன துவேசத்தை தூண்டுகின்றனர். அது தான் உண்மை இது மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அரச காணியை புத்த மகாசபைக்கு கொடுத்தனர். அன்று தொடக்கம் புத்தர் சிலை இருந்தது. இன்று நேற்று அல்ல அப்போது திருகோணமலையின் நகரசபையை ஆட்சி செய்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் தமிழரசு கட்சி தான் ஆட்சி செய்கிறது.

அன்று மஹிந்த ராஜபக்ஷ அரச காணியை வழங்கிய புத்தர் சிலை வைக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? இப்போதும் நகராட்சி சபையை ஆட்சி செய்வது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தா இல்லை?

அதாவது திட்டமிட்டு எப்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செய்தார்களே இவ்வாறு திட்டமிட்டு நாங்கள் கொண்டு போய் இரவோடு இரவாக புத்தர் சிலையை வைப்போம் பின்னர் அதை எடுத்து கொண்டு வாங்க அதனை தமிழர்கள் கொண்டு சென்று விட்டார்கள் என ஒரு இனத் துவேசத்தை ஏற்படுத்த மாற்று கட்சிகள் போட்ட திட்டம் தான் இது என்பது அடிப்படையான உண்மை.

தேசிய மக்கள் சக்தி இதை உணர்ந்து ஒரு மாற்றத்தை எடுத்து அதை திரும்பவும் அங்கு வைத்தோம் எனவே இதை நன்றாக சிந்திக்கவும். இனவாதம் இல்லாத ஒரு கட்சி தேசிய மக்கள் சக்தி.

76 வருடங்களாக பண்டாரநாயக்கா, டட்லி சேனாநாயக்க இன துவேசத்தை பேசி வந்த இவர்கள் மாறி மாறி இந்த இன துவேசத்தை செய்தனர். இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நாங்கள் ஒற்றுமையாக பயணத்தை மேற்கொள்வோம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு