மட்டக்களப்பு மாநகர சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புக்கு அமைவாக, கிழக்கு மாகாணத்தில் இன்று (26) முதல் 30.11.2025 வரை அதிக மழை வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.
அத்துடன் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியும், மரங்கள், பலவீனமான கட்டிடங்கள், கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் செல்லாமல் இருக்கவும் மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் பலத்த காற்று அல்லது மழையால் ஏற்படும் சேதங்கள், மரம் வீழ்ச்சி, மின் கம்பம் சம்பவங்கள் போன்றவை நடந்தால், உடனடியாக பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









