கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த இடத்தில் இருந்த கடற்படை வீரர்கள் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுண்டிக்குளத்தில் உள்ள கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், காணாமல் போன வீரர்களை மீட்க விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.








