மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அவர்கள் தற்போது பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








