Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாநகர சபை உறுப்பினர் சிபாரிசு; மட்டு பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

மாநகர சபை உறுப்பினர் சிபாரிசு; மட்டு பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக நேற்று சனிக்கிழமை (13) போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததையிட்டு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலையீடு செய்து எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக உறுதி மொழி வழங்கியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள பாலமீன்மடு கிராம சேவகர் பிரிவில் 410 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் இந்த பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததுடன் பலத்த சேதமடைந்துள்ளதுடன் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் பதில் கடமையாற்றி வந்த கிராம உத்தியோகத்தர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு இருந்த போதும், அந்த பகுதி மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் சிபார்சில் 26 பேருக்கு மட்டும் வீடு பாதிப்புக்கு 25 ஆயிரம் ரூபாவும் நிவாரணம் ஆகியன வழங்கியுள்ளார்.

எனவே உண்மையில் பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கிராம அபிவிருத்தி சங்க கட்டிட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். இதையடுத்து கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சகிதம் சென்று அங்கு கூடியிருந்த மக்களிடம் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது மக்கள், ‘இந்த பகுதி முற்று முழுதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது .முகத்துவாரம் கடல் மற்றும் களப்பு பகுதியை அண்டியதுடன் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் இந்த கிராமம் இருந்தபோதும், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட போதும் மாநகரசபை உறுப்பினர் தனக்கும் அவர் சார்ந்த 25 பேர் உட்பட 26 பேர் மட்டும் தான் பாதிக்கப்பட்டதாக தகவல் வழங்கப்பட்டு 25 ஆயிரம் ரூபா மற்றும் நிவாரணத்தை பெற்றுள்ளார்.

இது ஒரு முறைகேடு, பிழையானது உண்மையில் பாதிக்கப்பட நாங்கள் இருக்கும்போது இவ்வாறு கிராம உத்தியோகத்தர் பிழையாக செய்யப்பட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிடில் பிரதேச செயலகத்தை முற்றுகையிடும் போராடுவோம் தீர்வு வழங்குமாறு கோரினர்.

இதையடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில் நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் வருவதாக இருந்தார் திடீரென அரசாங்க அதிபர் கூட்டம் என்பதால் வரமுடியாது போயுள்ளது எனவே சில தவறுகள் நடந்துள்ளன. கிராம உத்தியோகத்தர் இந்த பிரிவுக்கு பதில் கடமைக்காக கடந்த இரண்டு மாதம் நியமித்தோம்.

அவர் இதற்கு புதியவர் எனவே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக உறுதி மொழியை அடுத்து மக்கள் வெள்ளிக்கிழமை நிவாரணம் வழங்காவிட்டால் நாங்கள் பிரதேச செயலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
Next Post
மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரவு நேர பஸ்தரிப்பு உணவகங்கள் சோதனை; ஒன்றுக்கு சீல்

மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரவு நேர பஸ்தரிப்பு உணவகங்கள் சோதனை; ஒன்றுக்கு சீல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.