நவம்பர் 27 ஆம் திகதி யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் உடல் நேற்று (14) மதியம் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக யட்டியந்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னவத்தையிலிருந்து பத்தனேகல வரையிலான வீதியை சுத்தம் செய்யும் போது, அருகில் ஒரு நாய் நிற்பதைக் கவனித்த குழுவினர், சோதனை செய்த போது கிதுல் மரத்தின் கிளைகளுக்கு அடியில் இறந்த சிறுமியின் உடலைக் கண்டுள்ளனர்
சடலம் பிரேத பரிசோதனைக்காக கருவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிறுமியின் தாய், தந்தை, தம்பி மற்றும் பாட்டி ஆகியோர் புதைந்து போனதாகவும் சிறுமியின் தாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமி மற்றும் அவரது தாயார் தவிர மற்றவர்களின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.







