Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவுக்குச் செல்லும் புலம்பெயர் மாணவர்களின் உண்மை நிலை; சர்வதேச ஊடகம் தகவல்!

கனடாவுக்குச் செல்லும் புலம்பெயர் மாணவர்களின் உண்மை நிலை; சர்வதேச ஊடகம் தகவல்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறோம், இத்தனை சர்வதேச மாணவர்களை வரவேற்கிறோம் என ஒருபக்கம் பெருமையடித்துக்கொள்கிறது கனடா.

அதை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் கனடாவுக்குச் செல்கிறார்கள். ஆனால், வரவேற்பதுடன் தனது வேலை முடிந்துவிடுகிறது என்பதுபோல இருக்கிறது கனடாவின் நடவடிக்கைகள்.

கனடாவில் இவ்வளவு சம்பளம் கிடைத்தால், நம் நாட்டுப் பணத்தில் இவ்வளவு வருகிறதே என்று கணக்குப்போட்டு ஆசையுடன் கனடாவுக்குச் சென்றால், அங்கு வீடு கிடைப்பதும் கஷ்டம், வீட்டு வாடகையும் எக்கச்சக்கம் என்பது தெரியவருகிறது.

வேலைக்குப் போன சிலர் ஏமாந்து போய் அமைதியாக நாடு திரும்பிவிட, படிக்கப்போகும் பிள்ளைகளுக்கு, அதுபோல படிப்பை பாதியில் விட்டுவிட்டு நாட்டுக்கு திரும்ப முடியாத ஒரு நிலை…

நேற்று வரை பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக் கனவுகளுடன் கனடா கனவுகளும் சேர்ந்துகொள்ள கனடாவுக்கு வந்தால், இங்கே தங்க இடம் பிடிப்பதற்குள்ளேயே பிள்ளைகளுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. சொந்த நாட்டில் தம்மை நம்பி ஒரு குடும்பம் இருப்பதை எண்ணி, நாட்டுக்கும் திரும்ப முடியாமல், கனடாவிலும் சரியான உதவிகள் கிடைக்காமலும் திணறிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு கூட்டம் சர்வதேச மாணவர்கள்.

இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தார் கேஷவ் (Keshav Malhotra, 20). வந்த நாள் முதல் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார் அவர்.

இதுவரை 17,000 அடிகள் நடந்துவிட்டேன், இதுவரை தங்குவதற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை என்கிறார் கேஷவ். நிறைய விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், வீட்டைப் போய் பார்த்தால் விளம்பரத்தில் காட்டப்பட்டதற்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதேபோல, ஒரு குளியலறை கொண்ட ஒரு குடியிருப்பில் எட்டுபேர் வரை தங்கினாலும், அதற்கும் எக்கச்சக்க வாடகை கேட்கப்படுகிறது என்கிறார் அவர்.

ஏற்கனவே, கனடா கல்லூரிகள் பல சர்வதேச மாணவர்களின் கல்விக்கட்டணத்தை நம்பித்தான் இயங்குவதாகக் கூறப்படுகிறது. இப்போது, வீட்டு உரிமையாளர்களும் இந்த மாணவர்களை நம்பி வருவாய் பார்க்க முடிவுசெய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

அதாவது, சர்வதேச மாணவர்கள் கனடாவுக்கு படிக்க வருகிறார்கள். அவர்கள் கனடாவில் செட்டில் ஆனதும், அவர்களை நம்பி அவர்களுடைய குடும்பத்தினர் கனடாவுக்கு வருகிறார்கள். ஆக, ஒரு மாணவரை நம்பி இத்தனை பேர் வருகிறார்களே என கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது கனடா.

ஆக, சர்வதேச மாணவர்களால்தான் கனடாவில் வீடுகளுக்குத் தட்டுப்பாடு என்று கூறி, மாணவர்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுவருகிறது கனடா.

அப்புறம் எதற்கு ஜம்பமாக, நாங்கள் ஆண்டுக்கு இத்தனை புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறோம், இத்தனை சர்வதேச மாணவர்களை வரவேற்கிறோம் என பெருமையடித்துக்கொள்ளவேண்டும்?

கனடாவுக்கு, வேலை செய்ய ஆட்கள் தேவை. ஆனால், படித்துமுடித்து வேலைக்கு செல்லும் சர்வதேச மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துவந்தால் மட்டும் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது என்று சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
Next Post
சர்ச்சைக்குரிய இரு நாட்டு ஜனாதிபதிகள் சந்திக்கவுள்ளனர்!

சர்ச்சைக்குரிய இரு நாட்டு ஜனாதிபதிகள் சந்திக்கவுள்ளனர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.