வவுனியாவின் ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் இன்று (19) காலை இந்தக் கொலையைச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சந்தேக நபர் கழுத்து வெட்டப்பட்டு காயமடைந்து தற்போது வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








