மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், செட்டிபாளையம் சிவன் கோவில் முன்பாக நேற்று (19.12.2025) இரவு 11.49 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த டிரைவர் கவலைக்கிடமான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









