Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜே.வி.பி அதன் கொள்கைகளில் இருந்து திசைமாறிவிட்டது; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

ஜே.வி.பி அதன் கொள்கைகளில் இருந்து திசைமாறிவிட்டது; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

6 months ago
in அரசியல், செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியானது (ஜே.வி.பி.) அதன் ஆரம்பகால கொள்கைகளில் இருந்து தற்போது திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி. ஊடாகவே தனது அரசியல் பயணத்தை விமல் வீரவன்ச ஆரம்பித்தார்.

எனினும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை காரணமாக அவரைக் கட்சியை விட்டு வெளியேற்றும் முடிவை ஜே.வி.பி. எடுத்திருந்தது.

அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகி, தேசிய சுதந்திர முன்னணி எனும் புதிய கட்சியை ஆரம்பித்தார். அத்துடன், மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளையும் பெற்றுக்கொண்டார்.

கடந்த பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தேசிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்த பின்னர் ஜே.வி.பி. மீது விமல் வீரவன்ச கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர், “நான் இருந்த காலத்தில் இருந்த ஜே.வி.பி. அல்ல தற்போது காணப்படுகின்ற கட்சி. செயல் என்பதைவிட வாய்சொல் வீரர்களாகவே அந்தக் கட்சியினர் செயற்படுகின்றனர்.

அதுமட்டுமல்ல இந்தியா மற்றும் அமெரிக்காவுக்குச் சார்பாகச் செயற்படும் நிலைமையே காணப்படுகின்றது. தெளிவானதொரு கொள்கையும் அந்தக் கட்சியினரிடம் இல்லை.

கட்சித் தலைமையகத்தில் புரட்சியாளர்களின் படங்களை மட்டும் வைத்துக்கொண்டு, அவர்களின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.” என்றார்

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
Next Post
மருந்து மீது இலங்கை குற்றச்சாட்டு; சர்வதேச ஆய்வகப் பரிசோதனையில் நிரூபிக்க கோரும் இந்திய நிறுவனம்

மருந்து மீது இலங்கை குற்றச்சாட்டு; சர்வதேச ஆய்வகப் பரிசோதனையில் நிரூபிக்க கோரும் இந்திய நிறுவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு