Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரூபா 3.2 கோடி பெறுமதியுடைய 390 மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

ரூபா 3.2 கோடி பெறுமதியுடைய 390 மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதியில் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (21) இரவு 10.20 மணியளவில் சீனாவின் செங்டு (Chengdu) நகருக்குப் புறப்பட்ட சீன விமான சேவையின் CA-426 இலக்க விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

இதன்போது சுங்க அதிகாரிகளுக்கு இந்த இரண்டு நபர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த மாணிக்கக்கற்கள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணிக்கக்கற்களின் பெறுமதி சுமார் மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபா என குறிப்பிடப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களில் நீல மாணிக்கம், பத்மராகம், கிரிஞ்சி, சிவப்பு கற்கள், கனக, வெரோட், வைடூரியம், சந்திரகாந்தம், தோரமல்லி மற்றும் நட்சத்திரக் கல் ஆகிய பிரதான வகைகளைச் சேர்ந்த 756 கரட் எடையுள்ள 390 மாணிக்கக்கற்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!

September 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
Next Post
இன்றிரவு முதல் மழை தளர்வு – 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் கனமழை

இன்றிரவு முதல் மழை தளர்வு – 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் கனமழை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு