‘பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்போம், சுற்றுச் சூழலை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் வீதி நாடகமொன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணிக் கிராமத்தில் நேற்று திங்கட் கிழமை மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தின் ஏற்பாட்டிலும் சி.பி.எம். நிறுவனத்தின் நிதி அனுசரணையிலும் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன், இந்த வீதி நாடகத்தைகதிரவன் நாடகக் குழுவினருடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து வழங்கினர்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்து, சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தினர் பல்வேறு வேலைத்திட்டங்களை அம்மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.