Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எமக்கு ஆசிரியர் பணியே வேண்டும்-வேறு திணைக்கள பதவிகள் வேண்டாம்; மட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

எமக்கு ஆசிரியர் பணியே வேண்டும்-வேறு திணைக்கள பதவிகள் வேண்டாம்; மட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவே இருந்து ஆசிரியராக பணிபுரிகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமண மறுப்பு, அவர்களை பாடசாலைகளில் இருந்து ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றும் கல்வி அமைச்சின் செயற்பாடானது அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள் என்று தெரிவித்து மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் இன்று (23) பதிவுசெய்யப்பட்டன.

அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் க.அனிரன் தலைமையில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஒன்றுகூடினார்கள்.

இதன்போது ஆசிரியர்களாக கடமையாற்றும் தம்மை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இது தமது அடிப்படை உரிமை மீறும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்து ஒவ்வொருவரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் கடிதங்களை வழங்கினார்கள்.

“ஆறு வருடமாக கல்வி திணைக்களத்திற்குள் அபிவிருத்தி உத்தியோகத்தராக உள்வாங்கப்பட்டு ஆசிரியர்களாக கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றோம். பாடசாலைகளில் பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்களாக ஒருவருடம் பணியாற்றிய பின்னரே அப்பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றிலும் வழங்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் அப்பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்ளவர்கள் மீது இருந்த வழக்குகள் முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். வழக்கு நிலுவையில் உள்ளபோது எந்த வழக்கும் இல்லையென பிரதமர் தெரிவித்திருப்பதானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் பாடசாலைகளில் ஆறுவருடங்கள் ஆசிரியர்களாக கடமையாற்றியுள்ள நிலையில் எங்களை கல்வி அமைச்சானது ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்வாங்காது ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு முன்னெடுக்கும் முயற்சியானது எமது அடிப்படை உரிமையினை மீறுகின்ற செயற்பாடாகவே கருதுகின்றோம். இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுத்து எங்களுக்கு தீர்வினைப்பெற்றுத்தரவேண்டும்.

இந்த அரசாங்கம் நல்லது செய்கின்றது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றபோதிலும் எங்கள் விடயத்தில் மிக மோசமாக நடந்துகொள்வதாகவே நாங்கள் உணரமுடிகின்றது” எனவும் இதன்போது கலந்துகொண்ட அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆறு வருடங்களாக பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக கடந்த ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை தொடர்ந்து சட்டரீதியான நகர்வுகளை கடந்த ஆண்டு முதல் நாங்கள் முன்னெடுத்துவந்தோம். அதனடிப்படையில் கடந்த அரசாங்கம் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு ஆசிரியர்களாக கடமையாற்றும் இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வினை வழங்குவதற்கு எத்தனித்தபோதிலும் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் தற்போதைய அரசாங்கம் ஆறுவருடமாக ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களை நிரந்தர ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்வாங்குவதற்கு பல விடயங்களை இந்த அரசாங்கம் கூறிவருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை – முகவரியில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை - முகவரியில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.