சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவுத் திருப்பலி 24-12-2025 நள்ளிரவு 11:30 மணிக்கு ஆரம்பமானது.
கிழக்கிலங்கையின் பழமைவாய்ந்த புனித திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மக்கள் நேற்று நள்ளிரவு வெகுசிறப்பாக கொண்டாடினார்கள்.
இதன்போது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்து நற்கருணை ஆராதனை இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.































சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். இத்திருப்பலியினை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் சிறப்பித்ததுடன், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத் திருப்பலியில் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் கலந்துகொண்டதுடன், விஷேடமாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் ஜெபிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். மேலும் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.








