சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் இன்று பாசிக்குடா கடற்கரையில் இடம்பெற்றது.
பாசிக்குடா துறைமுக கிராமிய மீனவர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வானது கடற்கரையில் அமைக்கப்பட்ட உயிர் நீத்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மதகுருமார்களின் பிரார்த்தனையுடன் நினைவு கூறப்பட்டது.
கடற்கோள் அனர்த்தத்ததினால் உயிரிழந்தவர்களின் உறவுகளை நினைத்து உறவினர்களால் வருடா வருடம் நினைவு கூறப்படுவது வழக்கமாகும்.கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 512 பேர் உயிரிழந்துள்ளனர்.

















