Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாவட்ட செயலக வளாகத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வ நினைவேந்தல்

மட்டு மாவட்ட செயலக வளாகத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வ நினைவேந்தல்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுனாமி பேரலையால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில், நேற்று (26) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவால், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 68 கிராம சேவகர் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இப்பேரழிவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,840 பேர் உயிரிழந்ததுடன், 908 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், 18,041 பேர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இத்தகைய இயற்கை அனர்த்தங்களில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் நாளாக, இலங்கை அரசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதியை தேசிய பாதுகாப்பு தினமாக அறிவித்து, காலை 9.25 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

நேற்றுடன் சுனாமி பேரலை ஏற்பட்டு 21 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையளவில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் சுமார் 35,000 பேர் உயிரிழந்ததுடன், 5,637 பேர் காணாமல் போயிருந்தனர். மேலும், சுமார் 9 இலட்சம் வீடுகள் சேதமடைந்திருந்ததுடன், உயிரிழந்தவர்களில் சுமார் 40 வீதமானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்ட உதவி பணிப்பாளர் எ.எஸ்.எம். சியாத், மாவட்ட பிரதம பொறியியலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் பல அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது

முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு