புத்தாண்டின் முதல் நாளான இன்று (01) காலை, காலி வீதியின் கஹவ மற்றும் கொடகம இடையேயான பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த தென்னை மரத்தில் மோதி தலைகீழாக நின்றுள்ளது.
வீதியில் பயணித்த ஒருவரை காப்பாற்ற முயன்றபோது, எதிர்பாராத விதமாக காரின் கட்டுப்பாடு இழக்கப்பட்டதே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








