Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்; நளின் பண்டார தெரிவிப்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்; நளின் பண்டார தெரிவிப்பு

9 months ago
in செய்திகள்

பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதில் நேரடியாகத் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்வி மறுசீரமைப்புக்கள் என்ற போர்வையில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட இந்த அரசாங்கம் என்ன செய்வதற்கு முயற்சிக்கின்றனர்?

6ஆம் தரத்துக்கான பாடத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருந்த இணையதளமொன்றின் பெயர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்திருக்கின்றார்.

இது ஒரு சதித்திட்டம் எனக் கூறுகின்றனர். அவ்வாறெனில் கல்வி அமைச்சிற்குள் அரசாங்கத்துக்கு எதிரான சதிகாரர்கள் யார்?

கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட இந்த அரசாங்கமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் உண்மையில் புதிய ஆண்டில் அரசாங்கத்துக்கான நற்செய்தியல்ல. எமது நாட்டின் கல்வி எங்கு செல்கிறது என்பதே தற்போது காணப்படும் பாரிய பிரச்சினையாகும்.

இவ்வாறான பாரியதொரு தவறு இடம்பெற்றுள்ளமையை முன்னிட்டு பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதில் நேரடியாகத் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை நாடுவதில் எவ்வித பயனும் இல்லை. தவறு இடம்பெறுவதற்கு வழியமைத்தவர்களே அதற்கான பொறுப்பினையும் ஏற்க வேண்டும். அவ்வாறு பொறுப்பு கூற வேண்டிய இடத்திலுள்ள பிரதான அதிகாரி பதவி விலக வேண்டும். ஜனாதிபதி உடனடியாக இது குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
Next Post
துப்பாக்கி சூட்டு சம்பவம்; நபரை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

துப்பாக்கி சூட்டு சம்பவம்; நபரை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு