Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (7) மாலை வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்து.

இதையடுத்து தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், தாக்குதலாளியை கைது செய்த வேண்டும் என்றும் கோரி தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் சங்கம் நாளை மறுதினம் தீவகத்தில் சேவை முடக்கத்தை முன்னெடுக்க உள்ளாதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தெரியவருகையில்,

இன்று (7) மாலை யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வழித்தடம் 780 தனியார் பேருந்து, பயணிகளுடன் ஊர்காவற்றுறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயம், அல்லைப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒருவர் பேருந்தை வழிமறித்து ஏறி, “உனக்கு வாகனம் ஓட்டத் தெரியாதா” எனக் கேட்டு சாரதி மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது சாரதி கடுமையாக தாக்குதலுக்குள்ளாவதை அவதானித்த பயணிகள் தாக்குதலாளியை பேருந்தில் இருந்து இறக்கியுள்ளனர்.

இதையடுத்து கடும் தாக்குதலுக்குள்ளான சாரதி, பயணிகளுடன் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளதுடன், தாக்கிய நபர் தொடர்பான விவரத்தையும் மக்களின் தரவுகளுடன் பொலிசாருக்கு வழங்கியுள்ளார்.

அத்துடன் கடமையின் போது கடுமையாக தாக்குதலுக்காளான சாரதி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த குறித்த சாலையின் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது விடின் நாளை மறுதினம் 09 ஆம் திகதி பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு