“தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை “என்ற தொனிப்பொருளில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு 3 நாள் தேசிய வேலைத்திட்டமானது வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சுடன் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது இன்று காலை பிரதேச சபை வளாகத்தில் இருந்து ஒன்று கூடிய தவிசாளர் சொயலாளர் உட்பட சபை உத்தியோகத்தர்கள் டெங்கு நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தல் அதில் இருந்துபொது மக்கள் பாதுகாப்பு பெறுவது தொடர்பான வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலம் திருகோணமலை வாகரை பிரதான வீதி வழியாக மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் ஒலி பெருக்கி மூலம் தகவல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள், பாடசாலைகள், அரச திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வளாகங்களில் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டுடன் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நிகழ்வில் தவிசாளர் க.தெய்வேந்திரன்.செயலாளர் T.S.P குயின்ரஸ்.சுகாதார வைதிய அதிகாரி H.M.T.சஜிந்த World Vision நிறுவன பணிப்பாளர் எ.ரவீந்திரன் சுகாதார சேவைகள் உத்யோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



















