Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கண்டியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

கண்டியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் 3 பயணிகள் பேருந்துகளைத் தற்செயலாக சோதனையிட்ட போது, அந்த மூன்று சாரதிகளும் இரண்டு நடத்துனர்களும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்ததாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்புக்கான “நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கையில்” கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இது மிகவும் ஆபத்தான ஒரு அச்சுறுத்தல். எமது சுற்றிவளைப்பு அறிக்கைகளின்படி, கண்டி பிரிவில் ஹெரோயின் பயன்பாடு 2025 இல் 1 கிலோ 200 கிராமினால் அதிகரித்துள்ளது. அதேவேளை, ஐஸ் போதைப்பொருள் பாவனை 5 மடங்காக அதிகரித்து, 3 கிலோ 23 கிராம் வரை உயர்ந்துள்ளது.”

“பயணிகள் போக்குவரத்துத் துறையில் உள்ள பெருமளவான ஊழியர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். நாம் சோதனையிட்ட 3 பேருந்துகளிலுமே சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பாவித்திருந்தனர்.”

“இதன் பயங்கரம் என்னவென்றால், எம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உயர் நிலையில் உள்ள பெண்களும் இதில் பலமாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களும் உள்ளனர் என்பதை வருத்தத்துடன் கூறவேண்டியுள்ளது.”

“இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒரு பரிமாற்ற நிலையமாக மாறியுள்ளது. இந்த வலையமைப்பு வெளிநாடுகளில் இருந்தே இயக்கப்படுகிறது. ‘நுவர அக்கா’, ‘மாத்தளை அக்கா’, ‘குடு சைமா’ போன்றவர்களே கண்டிக்கு போதைப்பொருள் அனுப்பும் முக்கிய புள்ளிகள் ஆவர்.”

பொலிஸாரால் மட்டும் தனித்து இதனை ஒழிக்க முடியாது எனவும், இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
இறக்குமதி பால் மாவின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு

இறக்குமதி பால் மாவின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.