புறக்கோட்டையிலுள்ள ஒரு விடுதியொன்றுக்கருகில் பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண்ணொருவரை கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர் பொலிஸ் விளையாட்டு சீருடையை அணிந்திருந்ததாகவும் மேலும் துப்பாக்கி போன்ற ஒரு மரப் பொருளை வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








