Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்”; திருமலையில் சரத் வீரசேகர ஆவேசம்!

“நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்”; திருமலையில் சரத் வீரசேகர ஆவேசம்!

6 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

“நவீன பிரபாகரன்களோடு போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என்று அனுர அரசை நோக்கி சரத் வீரசேக தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது.

திருகோணமலை டச்ச்பே (Dutch Bay) கடற்கரையில் கடந்த 2025 நவம்பர் 16ஆம் திகதி நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பான வழக்கு, நேற்று (திங்கட்கிழமை, 19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு சென்றிருந்த சரத் வீரசேகர, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

(திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.)

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து பௌத்த சாசனத்தை அவமதித்து வருவதாகவும், பௌத்த பிக்குகளை கைது செய்து சிறையில் அடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இது ஒரு மதத்தின் பாதுகாப்பு என்ற பெயரில், அரசியல் எதிர்ப்பை மத அடையாளத்துடன் கலக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், “ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று பொங்கல் உண்கின்றார்; ஆனால் வடக்கிற்குச் செல்லும் பௌத்தர்களை இனவாதிகள் என முத்திரை குத்தி நிந்திக்கின்றார்” என அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களுக்கே ஜனாதிபதியும் பிரதமரும் துரோகம் இழைக்கின்றனர் என்றும், அந்தத் துரோகத்தின் விளைவாகவே இன்று பௌத்த சாசனம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யகம்பத், மிகிந்தலை விகாரையின் நாயக்க தேரர், மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பல பௌத்த தேரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் திருகோணமலையில் திரண்டிருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பும் அரசியல் பதற்றமும் நிலவியது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
Next Post
ஸ்ரீதரன் சுமந்திரன் ஆகிய கட்சி விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை; சீ.வீ.கே. சிவஞானம்

ஸ்ரீதரன் சுமந்திரன் ஆகிய கட்சி விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை; சீ.வீ.கே. சிவஞானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு