ஏறாவூர் பற்று ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பின் ஊடாக மாற்று திறனாளி கலைஞர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அக்கினி இசை குழுவின் தலைவரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான ரகுவரன் அவர்களினால் 17 பெண் மாற்று திறனாளி கலைஞர்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தில் மாற்று திறனாளிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள்,புறக்கணிப்புகள் தொடர்பாக, போரினால் மாற்றுதிறனாளிகளாகிய பெண் கலைஞர்களாக தங்களது பிரச்சினைகளை நாடகங்கள் பாடல்கள் ஊடாக வெளிக் கொண்டு வந்திருந்தனர்.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. S. அருள்மொழி, பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் சிவலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள் அமைப்பின் தலைவர் கோணேஸ்வரன், சிரேஸ்ட ஊடகவியலாளரும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன்,
பெண் சமூக செயற்பாட்டாளர் சர்மிளா உதயகுமார், சமூக சேவகர் மோகனராஜன், ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்ததுடன்,மாற்று திறனாளிகளுக்கான எதிர்கால வேலைத்திட்டங்கள், உதவி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடி இருந்தனர்.






















