Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

8 months ago
in செய்திகள்

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் முறைகேடான விதத்தில் சொத்துக்களை ஈட்டிய 65 சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போதைப்பொருள் வர்த்தகம், மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களின் மூலம் முறையற்ற விதத்தில் ஈட்டப்படும் சொத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பணச் சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்துக்கமைய விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 65 சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்தோடு 2024 மற்றும் 2025 ஆகிய இரு வருடங்களிலும் அவ்வாறு சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 30 வீடுகள், 1197 பேர்ச்சஸ் காணி மற்றும் 3539 இலட்சம் ரூபா ரொக்கப்பணம் என்பன அரசுடமையாக்கப்பட்டுள்ளன அல்லது முடக்கப்பட்டுள்ளன.

மேலும் குருநாகல், இப்பாகமுவ பகுதியில் வெளிநாடு சென்று தலைமறைவாகி, நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வரும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டலின் பேரில் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பெறப்பட்ட சொத்துகளுடன் கடந்த திங்கட்கிழமை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரிடமிருந்து ஒரு கோடியே 99 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்திருந்த 28 கோடியே 33 இலட்சம் ரூபா பணமும் முடக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் இவ்வாறான குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்கள் தொடர்ந்து தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன். சந்தேகத்திற்கிடமான நபர், வீடு, காணி மற்றும் வாகனங்கள் இருப்பின் அவை தொடர்பாக 1818 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
Next Post
மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சப்பவம்; விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சப்பவம்; விவசாயி ஒருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு