Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஒலிக்க செய்த அசாத் மௌலானாவின் குரல்பதிவு!

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஒலிக்க செய்த அசாத் மௌலானாவின் குரல்பதிவு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தம்மிடமுள்ள சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் உள்ளிட்ட சாட்சியங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கோரியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 ஆவணப்படத்தின் தகவலாளரான ஹன்சீர் அசாத் மௌலானாவின் குரல் பதிவு ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றைய தினம் (07.09.2023) நாடாளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துறை சந்திரக்காந்தன் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையின் பின்னணியில் பல விடயங்கள் இருப்பதாக குறித்த குரல் பதிவில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் சிறந்த முறையில் நீதியை நிலைநாட்டியுள்ளது. பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பல வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 79 சந்தேகநபர்களுக்கு எதிராக 42 குற்றப்பத்திரங்கள் இதுவரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகள் பாகுபாடின்றி சுயாதீனமான முறையில் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை ஹன்சீர் அசாத் மௌலானா என்ற நபர் செனல் 4 தொலைக்காட்சியில் வெளிப்படுத்தாத குரல்பதிவு, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் உள்ளது. அத்துடன் அவர் அதனை நாடாளுமன்றிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

அப்படியானால் ஹன்சீர் அசாத் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு விசேட குரல்பதிவை அனுப்பியுள்ளார். இந்த நிலையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் உள்ள சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்
செய்திகள்

மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்

November 2, 2026
வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!
செய்திகள்

வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!

November 2, 2026
“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்

November 2, 2026
இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

November 2, 2026
Next Post
மட்டக்களப்பில் கடைகடையாக காவல்துறை சீருடையில் மதுபானத் திருட்டு!

மட்டக்களப்பில் கடைகடையாக காவல்துறை சீருடையில் மதுபானத் திருட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு