Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!

வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!

58 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் எல்லைக் கிராமங்களும் பூர்வீக நிலங்களும் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் காணப்படுவதாகவும் தயாக செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு – மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாளை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மயிலத்தமடு – மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தாயகக் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியானது, காலங்காலமாகத் தமிழ் மக்கள் தமது கால்நடைகளை மேய்ப்பதற்குப் பயன்படுத்தி வந்த பாரம்பரிய நிலப்பகுதியாகும். இந்த நில உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகப் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ள போதிலும், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களும் எல்லைக் கிராமங்களும் எவ்வாறு பாதிக்கப்பட்டனவோ, அதேபோன்ற நிலைமையின் ஓர் அடையாளமாகவே மயிலத்தமடு – மாதவனை பகுதியில் இடம்பெறும் அத்துமீறிய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளையும் தாம் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மேய்ச்சல் தரை நிலங்கள் அபகரிக்கப்படுதல், கால்நடைகள் அழிக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் பாதிக்கும் செயற்பாடுகளாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேய்ச்சல் தரைக்கான காணி ஒதுக்கீடு தொடர்பில் சுட்டிக்காட்டு

கிழக்கு மாகாண சபை இறுதியாகச் செயற்பட்ட காலத்தில், மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைக்காக 10,000 ஹெக்டேர் காணிகளை ஒதுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததாக இ.செல்வகுமார் தெரிவித்தார்.

குறித்த தீர்மானம் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்னரே கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர் அந்தக் காணி ஒதுக்கீட்டுத் திட்டம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு 3,000 ஏக்கராக மாற்றப்பட்டதாகவும், இறுதியாக ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது 1,700 ஏக்கர் காணிகளை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டும் இதுவரையில் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மயிலத்தமடு – மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் வெற்றியடைவது அவசியமானது எனக் குறிப்பிட்டார்.

இது குறிப்பிட்ட சில பண்ணையாளர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. தமிழ் மக்களின் பாரம்பரிய நில உரிமை மற்றும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியமான விவகாரமாகும்.

எனவே, தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, தமிழ் தேசிய உணர்வுடன் செயற்படும் அனைவரும் நாளைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பண்ணையாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்திற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பண்ணையாளர்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு அனைவரும் வலுச்சேர்க்க வேண்டும் எனவும் இ.செல்வகுமார் கேட்டுக்கொண்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்
செய்திகள்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்

November 2, 2026
33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!

November 2, 2026
மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்
செய்திகள்

மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்

November 2, 2026
“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்

November 2, 2026
இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
Next Post
மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்

மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.