Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட டெய்லர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பி.கே. திலகரெத்தின தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான வர்ண ஜயசுந்தரின் ஆலோசனையுடன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலா ரத்னாவின் வழிகாட்டலில், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. திலகரெத்தின மற்றும் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமீர தலைமையில் இரண்டு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த இரு குழுக்களும் சம்பவ தினமான நேற்று இரவு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும் காத்தான்குடி பகுதியிலும் ஒரே நேரத்தில் மாறுவேடத்தில் வீதி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

அதன்போது, காத்தான்குடி எப்.சி. வீதியில் போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற 26 வயதுடைய வியாபாரியை சுற்றிவளைத்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.

மேலும், ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில், அந்தப் பகுதியில் “ஈஸ்ரன் டெய்லர் செப்” என்ற ஆடைகள் தைக்கும் கடையின் உரிமையாளரான மற்றொரு வியாபாரியை 110 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
Next Post
அரச வெசாக் நிகழ்வு தொடர்பான அறிவிப்பு

அரச வெசாக் நிகழ்வு தொடர்பான அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.