Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பணிநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த கதிரியக்க சங்கம் தீர்மானம்

பணிநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த கதிரியக்க சங்கம் தீர்மானம்

7 months ago
in செய்திகள்

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நாளை (28) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த கால வரையறையற்ற பணி நிறுத்தத்தை 48 மணித்தியாலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அரசு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்தே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை வைத்தியசாலையில், தகுதியற்ற நபர்களால் நோயாளிகளுக்கு கதிரியக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தும் குறித்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரின் செயற்பாடுகள் குறித்து சுகாதார அமைச்சகம் விசாரணையை நடத்தத் தவறியமையினாலும் இப் பணிநிறுத்தம் முன்னெடுக்கப்படவிருந்தது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, பிரதி பணிப்பாளர் குறித்த முடிவு அடுத்த 48 மணித்தியாலத்தில் தெரிவிக்கப்படும் என்றும் சுகாதார பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சுகாதார பிரதி அமைச்சர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதி அமைச்சர், அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

பணி நிறுத்தத்தால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டே அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் இந்த பணிநிறுத்தத்தை 30ஆம் திகதி காலை 8.00 மணிவரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
அம்பலாங்கொடை கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்

அம்பலாங்கொடை கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு