இந்த ஆண்டுக்கான இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய்களை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் 13ஆவது வரவுசெலவுத்திட்டம் இன்று (01) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 9ஆவது வரவு செலவுத்திட்டம் ஆகும்.
குறிப்பாக, இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“சுயசார்பு இந்தியா” (ஆத்மநிர்பர் பாரத்) என்ற கருப்பொருளின் கீழ் வடிவமைக்கப்பட்ட இந்த வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய்களை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.








