Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் கூற்றுகளை கட்டுப்படுத்த நிலையியற் கட்டளை திருத்த கோரிக்கை

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் கூற்றுகளை கட்டுப்படுத்த நிலையியற் கட்டளை திருத்த கோரிக்கை

6 months ago
in செய்திகள்

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக பத்தாவது பாராளுமன்றம் திகழ்கிறது.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் கொண்ட ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, அவர்கள் பாராளுமன்ற சபைக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள்.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும்” பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டின்” ஒரு பகுதியாக ஆண்டுதோறும் “செம்மஞ்சள் தினம்” போன்ற அடையாள நிகழ்வுகளை நாங்கள் நடத்தியிருந்தாலும், இந்த சபையின் செயல்பாடுகள் மூலம் அவற்றை அர்த்தமுள்ள வகையில் விளக்க முடியவில்லை என்பது தமது அவதானிப்பாகும் என பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சாரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கையளித்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து வாய்மொழியிலான துஷ்பிரயோகம் இடம்பெறும் போக்கு அண்மைய காலத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூற்றுகள் முன்னால் உள்ள சவால் வெறுமனே தனிநபர்களை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக மக்களின் இறையாண்மை மற்றும் பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அரசியலில் பங்கேற்கவும் உள்ள உரிமையை இலக்காகக் கொண்டது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த சமூகத்திலும் அரசியலில் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்பதற்கு பாதகமான முன்னுதாரணமாகவும் அமைகிறது என்றும் ஒன்றியத்தின் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் ஆண் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய இரு தரப்பினரினதும் நடத்தை அல்லது கூற்றுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பரிந்துரையாகும். நிலையியற் கட்டளைகளின் கீழ் “பாராளுமன்றத்தில் ஒழுக்கம்” பிரிவின் மூலம் இது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில், புதிய நிலையியற் கட்டளையைச் சேர்த்து நிலையியற் கட்டளைகளைத் திருத்துமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை

ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு