Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம்; ரிஷார்ட் பதியுதீன்

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம்; ரிஷார்ட் பதியுதீன்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர்,​

“கிவுல் ஓயா திட்டம் என்பது தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களிலே பாரம்பரியமான ஒரு பெரிய காட்டை அழித்து உருவாக்கப்படவுள்ளது. குறிப்பாக சாளம்பைக்குளம், பெரியமடு, அல்லது மடு ஆகியவை 2009க்கு பின்னரே காடுகளாக வர்த்தமானியில்அறிவிக்கப்பட்டது. ஆனால், குறித்த காடானது பல தசாப்தங்களுக்கு முன்னர் காடாக வர்த்தமானியில் அறிவிககப்பட்டதாகும்.

இந்நிலையில் குறித்த திட்டத்திற்காக பழமையான 5,000 ஏக்கர் உள்ள காட்டை அழிக்கவுள்ளனர். பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காகவும், வேறு மாவட்டத்தில் வாழ்கின்ற பேரினவாத மக்களை இங்கே கொண்டு வந்து குடியேற்றம் செய்வதானது, மிகப்பெரிய சதியாகும்.

குறித்த சதிக்காகவே 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காடுகளை அழித்து செய்கின்ற கிவுல் ஓயா திட்டமானது ஒரு பிழையான திட்டமாகும்.

சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என சிந்திப்பவர்கள் இதற்கு எதிராகவே வழக்கு போட வேண்டுமே தவிர 100 வருடம் பழமையான மன்னார் – புத்தளம் வீதியை மூடுவதற்கு வழக்கு போட்டு வெற்றியடைந்து, அதன் ஊடாக அதனை நியாயப்படுத்தி பேசுவது என்பது நியாயமானதன்று.

கிவுல் ஓயா திட்டம்தான் உண்மையான சுற்றுச்சூழலிற்கு பாதிப்பாகும், தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்ற வவுனியா மாவட்டத்திலே அல்லது வன்னி மாவட்டத்திலே இவ்வாறு செய்வதானது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலும் இதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தமிழ் தரப்பு எங்களை அழைக்கவில்லை என்றாலும் எதிர்காலத்திலே எங்கள் கட்சியும் பூரண ஆதரவை கட்டாயம் வழங்கும்.” என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!

August 8, 2026
நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 8, 2026
Next Post
ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு